அனைவருக்கும் ஓர் நற்செய்தி
நமது இயேசுவின் திருஇருதய ஆலய ஆராதனைக் கூடத்தில், 5 முதல் 10 நிமிடங்கள் செபிப்பதற்கு அனைவருக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
ஆலயத்தின் சிறிய நுழைவாயில் இதற்காக, அனைத்து நாட்களிலும் (காலை 9 மணிமுதல் 12 மணி & மாலை 3 மணிமுதல் 8 மணிவரை) திறந்திருக்கும்.
இந்நாட்களில் மாலை 4.30, 5.15, 6.00 மற்றும் 6.45 மணிநேரங்களில் (திங்கள் கிழமைகள் தவிர்த்து) தந்தையர்களால், ஆராதனைக்கூடத்தில் வைத்து, செபித்து திவ்ய நற்கருணை வழங்கப்படுகிறது.
அனைவரும் கூட்டமாக சென்று செபிப்பதை தவிர்த்து, தனி நபராகவோ, தனி குடும்பமாகவோ செல்ல அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
குறிப்பு:
- ஆராதனைக் கூடத்தில், கூட்டமாக உள்ளே செல்வதை தவிர்க்கவும்.
- செபிக்கும்போது சத்தமாக செபிக்காமல், அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறின்றி இடைவெளிவிட்டு அமர்ந்து செபிக்கவும்.
- அதிக நேரம் உள்ளே இருந்து செபிப்பதை தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்பளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- ஆலயத்தில் முகக்கவசம் அணியவேண்டியது அனைவருக்கும் கட்டாயமாகும்.
அன்புடன்🎄
ஆன்மீக வழிகாட்டி,
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
மனாமா, பகரின்.
